ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு: கட்டிட இடிபாடுகளை அகற்றாததால் பொதுமக்கள் அவதி

கோவை சங்கனூர் கால்வாய், ராஜவாய்க்கால் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. அந்த கட்டிட இடிபாடுகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2017-10-08 23:00 GMT
கோவை,

கோவையில் உள்ள குளங்கள், வாய்க்கால், ஆறு ஆகியவற்றின் கரைகளில் வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்படுவதால் நீர்நிலைகளுக்கு வரும் நீர்வரத்து வழிகள் அடைபட்டு விடுகிறது. இதனால் மழை காலங்களில் ஆங்காங்கே நீர் செல்வது தடுக்கப்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

இந்த நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருக் கும் மக்களுக்கு மாற்று இடங்களை ஒதுக்கி விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளில் குடியிருந்தவர்கள் குடிசை மாற்று வாரியம் சார்பில் வெள்ளலூரில் கட்டப் பட்டுள்ள வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ஆசாத்நகர், சேரன்நகர், அணைமேடு, திருச்சி ரோடு, கோத்தாரி லே அவுட், புலியகுளம், பெரியார்நகர், ஆட்டோ டிரைவர் காலனி, நஞ் சுண்டாபுரம், ஆத்துப் பாலம், பன்மால் வணிகவளாக சாலை ஆகிய பகுதிகளில் சங்கனூர் கால்வாய், ராஜவாய்க்கால் ஓரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1500 வீடுகள், கடைகள் ஆகியவை இடிக்கப்பட் டன.

ஆனால் இடிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகள் இன்றும் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து கிருஷ்ணசாமிநகர் அருகில் உள்ள ஆட்டோ டிரைவர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

சங்கனூர் கால்வாய் ஓரம் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. அப்போது இடிக் கப்பட்ட வீட்டில் இருந்த மரம், வயர், இரும்பு ஆகியவற்றை வீட்டு உரிமையாளர்கள் எடுத்து சென்று விட்டனர். ஆனால் கட்டிட இடிபாடுகள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கின்றன. அதற்குள் பழைய டயர்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் கிடக்கின்றன.

தற்போது நகர் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கட்டிட இடிபாடுகளுக்குள் கிடக்கும் பாத்திரங்களில் தேங்கி உள்ள மழை தண்ணீரில் இருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சலை பரப்பி வருகின்றன. இதனால் நாங்கள் பீதி அடைந்து உள்ளோம். எனவே டெங்கு காய்ச்சலை பரப்பும் இடிபாடுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் இரவு நேரங்களில் கட்டிட இடிபாடுகளில் உள்ள செங்கற்களை எடுக்க ஆட்கள் வருகிறார்கள. அவர்கள் பெரிய சுத்தியலை கொண்டு உடைத்து செங்கற்களை எடுத்து செல்கிறார்கள். இரவில் கற்களை எடுக்க வருபவர்களால் திருட்டு போன்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடனேயே வாழ வேண்டி உள்ளது. எனவே கட்டிட இடிபாடுகளை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், நீர்நிலை ஓரங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1500 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் இடிபாடுகளை அகற்றுவது பெரிய சவாலாக உள்ளது. எனவே விரைவில் டெண்டர் வெளியிடப்பட்டு, கட்டிட இடிபாடுகள் அகற்றப்படும் என்றார். 

மேலும் செய்திகள்