திருமங்கலம் அருகே விபத்து: பட்டாசு லாரிகள் தாறுமாறாக ஓடியதில் 2 பெண்கள் பலி
திருமங்கலம் அருகே விபத்தில் சிக்கிய பட்டாசு லாரிகள் தாறுமாறாக ஓடியதில் 2 பெண்கள் பலியானார்கள். அரசு பஸ் மீதும் லாரி மோதியதில் 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
திருமங்கலம்,
சிவகாசியில் இருந்து பட்டாசுகள் ஏற்றிய 2 லாரிகள் நேற்று அதிகாலை திருப்பூர் மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு சென்றன. திருப்பூர் சென்ற லாரியை சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி சென்றார். மங்களூரு சென்ற லாரியை பெரம்பலூரை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த லாரிகள் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டை அருகே ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. எஸ்.பி.நத்தம் விலக்கு அருகே வந்த போது, முருகன் ஓட்டி சென்ற லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித் தது. அதில் தாறுமாறாக ஓடிய லாரி, முன்னால் முருகேசன் ஓட்டி சென்ற லாரி மீது மோதியது.
மோதிய வேகத்தில் சாலை தடுப்பை தாண்டி மறுபுற ரோட்டில் சென்ற லாரி, அந்த வழியாக சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற அரசு பஸ் மீது மோதியது. பின்னர் லாரி மழைநீர் வாய்க்கால் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
இதேபோல் முருகேசன் ஓட்டி சென்ற லாரி நிலைதடுமாறி எதிர் திசையில் ஓடிய வேகத்தில் அருகில் இருந்த சிவக்குமார் என்பவரின் டீக்கடைக்குள் புகுந்து வெளியேறி, அங்கிருந்த வாய்க்கால் தடுப்பு சுவர் மீது ஏறி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.
அப்போது அந்த வழியாக நடந்து வந்த டீக்கடை வைத்திருக்கும் சிவக்குமாரின் மனைவி மகாலட்சுமி (வயது 33) என்பவர் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பக்கத்தில் கடை வைத்திருக்கும் பாலு (55) என்பவரும் காயமடைந்தார்.
இந்த விபத்துக்களை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு வந்த கள்ளிக்குடி போலீசார் விபத்தில் சிக்கி பலியான மகாலட்சுமியின் உடல், காயமடைந்த பாலு உள்பட பஸ் பயணிகள் 21 பேரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் காயமடைந்த பஸ் பயணிகளின் விவரம் வருமாறு:- கன்னியாகுமரி வட்டவிளையை சேர்ந்த தங்கமணி (67). நெல்லையை சேர்ந்த முருகன் (25), கன்னியாகுமரி அம்மாவிளையை சேர்ந்த சுந்தரராஜ் (52), தஞ்சையை சேர்ந்த வெண்ணிலவன் (24), களியக்காவிளையை சேர்ந்த பிரைட்(21) மற்றும் 6 பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.
இந்தநிலையில் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 80 வயதுடைய மூதாட்டி உள்பட சிலர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்தார். அவர் பெயர், யார்? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து பஸ் பயணிகள் 19 பேர் திருமங்கலம், மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்கம்பத்தில் லாரி மோதியதில் அதிலிருந்து பயங்கர சத்தம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் லாரியில் இருந்த பட்டாசுகள் சேதமின்றி தப்பியது. இந்த விபத்துக்களில் பட்டாசு மூலம் தீவிபத்து ஏற்படாமல் இருக்க, மதுரை தல்லாகுளம், கள்ளிக்குடி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள், கவிழ்ந்த லாரிகளில் தண்ணீர், சோப்பு நுரையை பீய்ச்சி அடித்தனர்.
மேலும் 2 லாரிகளிலும் இருந்த பட்டாசுகள் மற்ற லாரிகளில் ஏற்றிய பின்பு கவிழ்ந்து கிடந்த லாரிகள் தூக்கி நிறுத்தப்பட்டன. விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.