கார்கள் மோதிய விபத்தில் பெண் பலி; 7 பேர் படுகாயம்
தாராபுரம் அருகே கார்கள் மோதிய விபத்தில் பெண் பலியானார். மேலும் இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
அலங்கியம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள செலாம்பாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மனைவி பத்மா (வயது 57). குண்டடம் அருகே வெறும்வேடம்பாளையத்தில் சேர்ந்த பத்மாவின் உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிக்க ஒரு காரில் பத்மா செலாம்பாளையத்தில் இருந்து வெறுவேடம்பாளையத்திற்கு சென்றார். காரை தாராபுரம் நடேசன் நகரை சேர்ந்த கார் மெக்கானிக் முகுந்தன் (38) ஓட்டினார்.
காரில் பத்மாவின் உறவினர்களான செலாம்பாளையத்தை சேர்ந்த வாசுகி (52) மற்றும் குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சிவகுமார் (48), முகுந்தனின் மனைவி கனிதா (32), முகுந்தனின் தந்தை நாச்சிமுத்து (65), தாய் ஜானகி (58) ஆகியோர் இருந்தனர். அங்கு துக்கம் விசாரித்து விட்டு தாராபுரம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கார்கள் மோதல்
பின்னர் அவர்கள் அதே காரில் மீண்டும் தாராபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்துள்ளனர். அந்த கார் தாராபுரம் அருகே உள்ள தொப்பம்பட்டி ரங்கபாளையம் இடையே உள்ள சிறிய ஓடை பாலத்தில் வந்தது. அப்போது இவர்களுடைய கார்களுக்கு பின்னால் மற்றொரு கார் வேகமாக வந்தது. அந்தகாரை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சக்திவேல் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக முன்னால் முகுந்தன் ஓட்டிச்சென்று கொண்டிருந்த காரின்பின் பகுதியில் மோதியது. இதையடுத்து முகுந்தன் ஓட்டிச்சென்ற கார் சாலையில் 3 முறை பல்டி அடித்து அருகில் இருந்த வயல் வெளியில் கவிழ்ந்தது.
பெண் பலி
இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் காயம் அடைந்து வலியால் சத்தம்போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்று கொண்டு இருந்த பிற வாகன ஓட்டிகள் தாராபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து சென்ற போலீசார் காருக்குள் இருந்தவர்களை மீட்டனர். அப்போது பத்மா சம்பவ இடத்திலேயே காருக்குள் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். மேலும் காரில் பயணம் செய்த வாசுகி, சிவகுமார், கனிதா, நாச்சிமுத்து, ஜானகி மற்றும் டிரைவர் முகுந்தன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சக்திவேல் என்பவரும் பலத்த காயம் அடைந்தார்.
உடனே அருகில் உள்ளவர்கள் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து பற்றிய தகவல்அறிந்ததும் தாராபுரம் போலீசார் விரைந்து சென்று பத்மாவின் உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா ஆகியோர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.விசாரணையில் சக்திவேல் மது அருந்திவிட்டு கார் ஓட்டி வந்தது தெரியவந்தது.
துக்கம் வீட்டிற்கு சென்று வந்தவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் தாராபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.