திம்பம் மலைப்பாதையில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்து 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்துக்குள்ளான லாரியை மீட்க சென்ற கிரேனும் கவிழ்ந்தது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கும், தாளவாடிக்கும் இடையே திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டைஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்-பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது.
குறுகலான இந்த மலைப்பாதையில் அடிக்கடி கனரக வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், பழுது ஏற்பட்டு ரோட்டின் நடுவில் நிற்பதும் வாடிக்கையாக நடக்கும் நிகழ்ச்சியாகிவிட்டது. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு கார், சுற்றுலா வேன் மற்றும் பஸ்களில் செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
திம்பம் மலைப்பாதையில் நடக்கும் இதுபோன்ற விபத்துகளை தடுக்க அதிக அளவு பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் தாளவாடியில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை பொள்ளாச்சியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டினார். திம்பம் மலைப்பாதையின் 23-வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று அதிகாலை 4 மணி அளவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமின்றி மணி உயிர் தப்பினார். இதனால் திம்பம் மலைப்பாதையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிகாலை நேரம் என்பதால் குளிர்காற்று வீசியது. இதனால் கார், பஸ்களில் வந்த பயணிகள் வாகனங்களை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடுரோட்டில் கவிழ்ந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக பண்ணாரியில் இருந்து கிரேன் கொண்டுவரப்பட்டு 3 மணி நேரம் போராடி காலை 7 மணி அளவில் அங்கிருந்து லாரியை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து தொடங்கியது. 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அந்த வழியாக பஸ்சில் சென்ற பயணிகள் தங்களுடைய ஊர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பொள்ளாச்சிக்கு தேங்காய் மட்டை பாரம் ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஓட்டினார். இந்த லாரி காலை 10 மணி அளவில் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் காயமின்றி முத்துக்குமார் உயிர் தப்பினார். உடனே பண்ணாரியில் இருந்து கிரேன் கொண்டு வரப்பட்டு கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்கும் பணியில் ஆசனூர் போலீசார் ஈடுபட்டனர். அப்போது லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கிரேனும் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.
இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து மற்றொரு கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராடி மதியம் 1 மணி அளவில் லாரி மற்றும் கவிழ்ந்த கிரேன் ஆகியவை மீட்கப்பட்டன.
திம்பம் மலைப்பாதையில் லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், மீட்க சென்ற கிரேனும் கவிழ்ந்ததால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தாளவாடியில் இருந்து காலை 8.30 மணி அளவில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு சென்ற சரக்கு வேன் திம்பம் மலைப்பாதையின் 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக அங்குள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து.
இதில் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த தாளவாடி அருகே உள்ள இடியாபுரத்தை சேர்ந்த டிரைவர் மகேஷ் (37) என்பவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.