இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
பொன்னேரியை அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் லட்சுமி (வயது 17). நேற்று முன்தினம் இரவு
பொன்னேரி,
மேட்டுப்பாளையத்தில் இருந்து வீட்டுக்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை திருப்பத்தில் அதிவேகமாக வந்த லாரி லட்சுமி மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழங்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை எப்.பி.ஐ. காலனி 8-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 40). இவர் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்.பில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருபாகரன் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் செவ்வாப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவர் செவ்வாப்பேட்டை சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது.
இதனால் நிலைதடுமாறிய அவர் மாட்டின் மீது மோதியதில் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.