சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி: உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி
கிருஷ்ணகிரி அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலியான சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்திற்கான நிவாரண நிதியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே தண்டேகுப்பம் கிராமத்தில் கடந்த 5-ந் தேதி மழையின் காரணமாக வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராதா, அவரது மகள் புஷ்பா, பேரன்கள் வசந்தகுமார், பகவதி என்கிற சந்துரு மற்றும் பேத்தி முல்லை ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
அமைச்சர் வழங்கினார்
அதன்படி இறந்தவர்களின் வாரிசுதாரர்களான ஜெயந்தி, செல்வம், காளிரத்தினம் ஆகியோரிடம் ரூ.20 லட்சத்திற்கான நிவாரண நிதியை தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேற்று வழங்கினார்.
அப்போது கலெக்டர் கதிரவன், அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜ், ஆவின் தலைவர் தென்னரசு, பால்வள இயக்குனர் மாதையன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சோக்காடிராஜன், தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் வெங்கடாசலம், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அருண், தாசில்தார் கன்னியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.