வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

கீழ்பென்னாத்தூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2017-10-07 22:45 GMT

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை தாசில்தார் சுகுணா தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் ராஜலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், அல்– அமீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுப்பிரமணி, தலைமையிடத்து துணை தாசில்தார் சீத்தாராமன், மண்டல துணை தாசில்தார் முருகன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பரிமளா, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பர்வின்பானு, முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவக்குமார், பிரபாகரன், சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்