சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-10-07 23:30 GMT

திருவண்ணாமலை,

தமிழகத்தில், மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டு உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2017–18–ம் கல்வி ஆண்டில் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும், 11–ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயபடிப்பு, இளங்கலை, முதுகலை படிப்புகள் உள்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் மற்றும் தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெற புதுப்பித்தல் இனங்களுக்கு www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் கடந்த 30–ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தது. தற்பொது இதற்கான காலஅவகாசம் வருகிற 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறபான்மையினர் மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவித் தொகையினை பெற உரிய காலத்தில் ஆன்லைன் மூலம் புதுப்பித்து பயனடைய வேண்டும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்