நிலுவைத்தொகை வழங்கக்கோரி நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

நிலுவைத்தொகை வழங்கக்கோரி நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-10-06 22:15 GMT

புதுச்சேரி,

புதுவை அரசு ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோதிலும் 8 மாத நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல் கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகையும், உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப்படியும் வழங்கப்படாமல் உள்ளது.

இத்தகைய நிலுவைத்தொகைகளை வழங்கக்கோரி நிர்வாக பிரிவு ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேகோரிக்கையை வலியுறுத்தி நேற்று புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.

தர்ணாவுக்கு நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமதாசன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் செல்வம் முன்னிலை வகித்தார்.

தர்ணாவில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கதுரை, விசுவநாதன், பியர் அருள்தாஸ், கணேசன், லூர்துசாமி, சுமித்ரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்