தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்ட தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர்,
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் முடித்து வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வறட்சியால் வேலையிழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் தீபாவளி பண்டிகை உதவித்தொகை வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஊதியமாக தினமும் ரூ..400 வழங்க வேண்டும். வேலை செய்த தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டம் முடிவில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.
இதில் இளைஞர்பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி. பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், நிர்வாகிகள் குணசேகரன், கோவிந்தராசு, தனசீலி, ராஜமாணிக்கம், கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கிலிமுத்து நன்றி கூறினார்.