காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

Update: 2017-10-06 22:30 GMT

அம்பத்தூர்,

இவரும், வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த மான்விழி (26) என்பவரும் காதலித்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்த மான்விழி, திருமணத்துக்கு பிறகு வேலையை ராஜினாமா செய்து விட்டார். அவரது நடத்தையில் முருகன் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதில் மனம் உடைந்த மான்விழி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மான்விழிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் இதுபற்றி தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்