தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-10-06 23:00 GMT

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வறட்சியால் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் தீபாவளி பண்டிகை உதவித்தொகை வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் திருத்தம் செய்து பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், குறைந்தபட்ச தினசரி ஊதியமாக ரூ.400–ம் வழங்க வேண்டும். வேலை செய்த தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தங்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் முல்லைமுருகன், பெத்தாட்சி ஆசாத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்