மால்வாணியில் கடத்தி கற்பழிக்கப்பட்ட 3½ வயது சிறுமி சாவு

மால்வாணியில் கடத்தி கற்பழிக்கப்பட்ட 3½ வயது சிறுமி ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தாள்.

Update: 2017-10-06 22:45 GMT

மும்பை,

மும்பை மால்வாணி பகுதியை சேர்ந்த 3½ வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தாள். சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஜெய்குமார் சிங் (வயது45) என்பவர் பலூன் வாங்கி தருவதாக கூறி அழைத்துச்சென்றார்.

அந்த சிறுமியை அவர் மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கற்பழித்து உள்ளார். இதில் சிறுமி வலி தாங்க முடியாமல் அழுததால் பயந்துபோன ஜெய்குமார் சிங் அங்கிருந்து ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் ஜெய்குமார் சிங்கை கைது செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவரால் கற்பழிக்கப்பட்டதில் சிறுமிக்கு உள்காயம் ஏற்பட்டது.

அவள் சிகிச்சைக்காக போரிவிலி சதாப்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

ஜெய்குமார் சிங் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்போது சிறுமி இறந்து விட்ட நிலையில், அவர் மீது சம்மந்தப்பட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்