ஈரோட்டில் பரிதாபம்: டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி

ஈரோட்டில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

Update: 2017-10-06 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் ரெயில் நகரை சேர்ந்தவர் சேக் ரிஸ்வான் (வயது 39). கேபிள் டி.வி. ஆபரேட்டர். அவருடைய மனைவி ஹையது நிஷா (34). இவர்களுக்கு நலித் அகமது (10) என்ற மகன் உள்ளான். இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 4–ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஹையது நிஷா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது கணவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தார். அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

அதனால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் ஹையது நிஷாவுக்கு காய்ச்சல் குறையவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி ஹையது நிஷா நேற்று காலை பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்