நெரூரில் வடிகால் பாலம் அமைக்கும் பணி தீவிரம்

நெரூரில் வடிகால் பாலம் அமைக்கும் பணி தீவிரம்

Update: 2017-10-05 22:45 GMT
கரூர்,

கரூர் அருகே நெரூரில் பிரசித்தி பெற்ற சத்குரு சதாசிவப்பிரமேந்திராள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வருகை தருவது உண்டு. இந்த நிலையில் கரூர்- நெரூர் சாலையில் சிறிய அளவிலான சாக்கடை வடிகால் பாலம் உள்ளது. அந்த பாலம் வாகன போக்குவரத்து நெரிசலுக்குரியதாக இருந்தது. இதையடுத்து புதியதாக வடிகால் பாலம் அமைக்க பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. பாலம் அமைப்பதற்கான பொக்லைன் எந்திரம் மூலம் மண் தோண்டப்படும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பணிகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், 40 அடி அகலத்தில், 8 மீட்டர் நீளத்தில் புதிய பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை 40 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினர். பாலப்பணிக்காக அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்