குப்பையில் கிடந்த வெடிபொருள் வெடித்து தொழிலாளி படுகாயம் போலீசார் தீவிர விசாரணை
திருச்சியில் குப்பையில் கிடந்த வெடிபொருள் வெடித்து தொழிலாளி படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். அதன்பிறகு அந்த வேலையை விட்டு விட்டு குப்பைகளில் கிடைக்கும் இரும்பு உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்று வந்தார். இவர், நேற்று முன்தினம் ஓயாமரி சுடுகாடு பகுதியில் குப்பைகளை சேகரித்து கொண்டு இருந்தபோது, அங்கு சில வெடிபொருட்கள்(டெட்டனேட்டர்) கிடந்துள்ளன. அது வெடிபொருள் என்று அறியாத அவர், அவற்றை எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டு தாராநல்லூர் பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கு அவரது நண்பர் சுமைதூக்கும் தொழிலாளியான காமராஜ்நகரை சேர்ந்த சண்முகசுந்தரத்தை அழைத்து கொண்டு, அந்த வெடிபொருட்களை தீ வைத்து எரித்துள்ளார். அப்போது அதில் ஒரு வெடிபொருள் திடீரென வெடித்தது. இதில் அருகே நின்ற சண்முகசுந்தரம் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ஓடி சென்று அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் அங்கு சென்று மணிகண்டனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ஓயாமரி சுடுகாடு அருகே 4 டெட்டனேட்டர்களை கண்டு எடுத்ததும், அதில் ஒன்று வெடித்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து மணிகண்டனை ஓயாமரி சுடுகாடு அருகே போலீசார் அழைத்து சென்றனர். அங்கு டெட்டனேட்டர்கள் கிடந்த இடத்தை போலீசார் பார்வையிட்டனர். மேலும், அருகில் ஏதும் டெட்டனேட்டர்கள் இருக்கிறதா? அல்லது அங்கு யாரும் டெட்டனேட்டர்களை பதுக்கி வைத்துள்ளார்களா? என சோதனை நடத்தினார்கள். இதில் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து, மீதம் இருந்த 3 டெட்டனேட்டர்களையும் பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். திருச்சியில் டெட்டனேட்டர் வெடித்து தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.