பலத்த மழை எதிரொலி பூண்டி ஏரியில் நீர் மட்டம் 4 அடி உயர்வு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

Update: 2017-10-05 23:45 GMT
ஊத்துக்கோட்டை,

இந்த ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாய், பேபி கால்வாய்களில் திறந்துவிடப்படுவது வழக்கம்.

தென்மேற்கு பருவ மழை பொய்த்து விட்டதாலும், கோடை வெயில் காரணமாகவும் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக லிங்க் மற்றும் பேபி கால்வாய்களில் தண்ணீர் திறப்பு ஏப்ரல் மாதம் 6-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு படிப்படியாக நீர் மட்டம் குறைந்து ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி ஏரியின் நீர் மட்டம் 13.40 அடியாக பதிவாகியதுடன், 19 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும்தான் இருப்பில் இருந்தது.

தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கு மழை நீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 17.75 அடியாக உயர்ந்தது. 77 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 107 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதாவது ஏரியின் நீர்மட்டம் 4.35 அடி உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்