விமான நிலையத்தில் ‘சாட்டிலைட்’ போனுடன் அமெரிக்க தொழில் அதிபர் கைது

அமெரிக்காவை சேர்ந்தவர் தொழில் அதிபர் பன்கிராத் எட்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து மும்பை வந்தார்.

Update: 2017-10-05 22:45 GMT

மும்பை,

அமெரிக்காவை சேர்ந்தவர் தொழில் அதிபர் பன்கிராத் எட்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து மும்பை வந்தார். சம்பவத்தன்று மும்பை விமானநிலையத்தில் இருந்து நேபாளம் செல்ல இருந்தார். இந்த நிலையில் விமானநிலையத்தில் இவரது பையை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட ‘சாட்டிலைட்’ போன் இருந்தது. இதையடுத்து பாதுகாப்பு வீரர்கள் அவரை பிடித்து சகார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அமெரிக்க தொழில் அதிபரை கைது செய்தனர். விசாரணையின் போது அவர், குடும்பத்தினருடன் பேச ‘சாட்டிலைட்’ போன் வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்