மால்வாணியில் சிறுமியை கற்பழித்த பெயிண்டர் கைது

மும்பை மால்வாணி பகுதியை சேர்ந்த 3½ வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள்.

Update: 2017-10-04 22:37 GMT

மும்பை,

மும்பை மால்வாணி பகுதியை சேர்ந்த 3½ வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஜெய்குமார் சிங்(வயது45) என்பவர் மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று கற்பழித்து உள்ளார். இதில், சிறுமி வேதனை தாங்க முடியாமல் அழுது இருக்கிறாள். இதனால் பயந்துபோன ஜெய்குமார் சிங் அவளை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். வீட்டிற்குள் அழுதபடி வந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, அவள் நடந்த சம்பவத்தை கூறினாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், ஜெய்குமார் சிங் மீது மால்வாணி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்குமார் சிங்கை கைது செய்தனர். சிறுமி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

மேலும் செய்திகள்