கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது
கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.3¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோயம்பேடு,
கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு நடந்து சென்ற சுதாகர் என்பவரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி 5 பேர் கொண்ட மர்மகும்பல் பணம் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றது. அப்போது சுதாகர் திருடன், திருடன் என கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அப்பகுதியில் நின்ற கோயம்பேடு போலீசார் தப்பியோடியவர்களை துரத்திச்சென்று 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்றும் 3 பேர் தப்பிச்சென்றனர்.
பின்னர் 2 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் காட்டுப்பாக்கம் 1-வது பிளாக் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (எ) பூனை பிரகாஷ் (வயது 24), நொளம்பூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (27) என்பதும், தப்பிச்சென்றவர்கள் கோயம்பேட்டை சேர்ந்த ராஜேஷ் (25), ராகுல் (22), விஜய் (24) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மண்ணடி பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் பிடித்தனர். பின்னர் 5 பேரிடமும் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வியாபாரம் தொடர்பாக பணம் வைத்திருக்கும் நபர்களை நோட்டமிட்டு, அவர்களிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்து வந்ததும், மதுரவாயல், நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களிடம் சங்கிலி பறித்து வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பிரகாஷ், விஜயகுமார், ராஜேஷ், ராகுல், விஜய் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.