டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவிகள் 2 பேர் பலி பொதுமக்கள் அச்சம்
வீரராகவபுரம் மற்றும் பெருங்களூரில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவிகள் 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடரும் காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள வீரராகவபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் யாழினி (வயது 12). இவள் பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் கடந்த வாரம் யாழினிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து யாழினியை அவளது பெற்றோர் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் யாழினிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யாழினியை அவரது பெற்றோர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை யாழினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல ஆதனக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி சசிகலா. இந்த தம்பதியின் மகள் கோகிலா(வயது 9). இவர் பெருங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த வாரம் முதல் கோகிலாவிற்கு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து கோகிலாவின் பெற்றோர் அவளை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து கோகிலாவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரத்த பரிசோதன செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோகிலாவை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோகிலா பரிதாபமாக இறந்தாள். இதை அறிந்த பெற்றோர்கள் அவளது உடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மேலும் நேற்று முன்தினம் கீரனூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி மோகனபிரியா டெங்குகாய்ச்சல் பாதிப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது.