குத்துவிளக்கு பட்டறை உரிமையாளர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை
திருவிடைமருதூர் அருகே குத்துவிளக்கு பட்டறை உரிமையாளர் வீட்டில் 70 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சமத்தனார்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சங்கர்(வயது55). இவர் தனது வீட்டின் எதிரில் குத்துவிளக்கு உற்பத்தி பட்டறை நடத்தி வருகிறார். சங்கர் தனது மனைவி அமராவதியுடன் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு ஆடுதுறை அருகே சூரியனார்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். நேற்று காலை சங்கர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்அறையின் பூட்டும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் இது குறித்து நாச்சியார்கோவில் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். குத்துவிளக்கு பட்டறை உரிமையாளர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் நாச்சியார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.