தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ததில் பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் கிடையாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ததில், பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2017-10-04 23:00 GMT
கோவில்பட்டி,

சாத்தூரில் சர்வோதயா சங்க கிளை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலையில் நாகர்கோவிலில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். அவருக்கு கோவில்பட்டி நகர எல்லையான நாலாட்டின்புத்தூர் கல்லூரியின் முன்பு பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.(அம்மா அணி) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ததில் பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் கிடையாது. அதனைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. தாஜ்மகாலை சுற்றுலா தலங்களில் இருந்து நீக்கியது பற்றியும் கருத்து கூற விரும்பவில்லை.

சினிமாவுக்கு சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ் சினிமா பாதிக்கப்படாத வகையில், மாநில அரசு வரி விதிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், மாவட்ட செயலாளர் நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்