சப்–இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் உள்ள செல்லியாரம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகின்றது.
சாத்தூர்,
சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் உள்ள செல்லியாரம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகின்றது. இதனால் அந்த சாலையில் கூட்டமாக இருந்தது. அப்போது அந்த பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ரோட்டில் செல்லும் பிற வாகனங்களுக்கு இடையூறாக ஆக்கிரமித்து நிற்க வேண்டாம் என கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சப்–இன்ஸ்பெக்டர் தங்களை தரக்குறைவாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.