பாதாள சாக்கடை இணைப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் தர்ணா

ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை நகரசபை அலுவலகத்திற்கு வந்தனர்.

Update: 2017-10-04 22:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை நகரசபை அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் தங்கள் வீடுகளில் சேரும் கழிவுநீரை அந்த பகுதியில் உள்ள நிலத்தில் விட்டு வந்தனர். இதன்பின் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனிடையே கழிவுநீர் சென்ற பகுதியின் நிலத்தின் உரிமையாளர் அந்த நிலத்தில் பாதாள சாக்கடை இணைப்பிற்காக தோண்டி குழாய்கள் பதிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இந்த பகுதி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து பாதாள சாக்கடை இணைப்பு வழங்கக்கோரி அப்பகுதியினர் நகரசபை அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்ததுடன் நேரில் ஆய்வு செய்து உரிய மாற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்