வேலூரில் 2-வது நாளாக பலத்த மழை வீடு இடிந்து விழுந்தது

வேலூரில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெயிலும், மாலை நேரங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.

Update: 2017-10-03 23:27 GMT
வேலூர்,

நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ½ மணி நேரம் தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

நேற்றும் காலை 9 மணி முதல் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 45 நிமிடத்துக்கு மேல் பலத்த மழை பெய்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவுக்கு பின்னரும் சாரல் மழை பெய்தவாறு இருந்தது.

பலத்த மழையின் காரணமாக சாலை, தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
வேலூர் வேலப்பாடி ராமர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவர் தனது மகன் ராமுடன் கான்கிரீட் வீட்டில் வசித்து வருகிறார். ஆதிலட்சுமி, ராமு ஆகியோர் நேற்று இரவு 9 மணியளவில் சாப்பிட்டு விட்டு வீட்டின் உள்அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக ஆதிலட்சுமி வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்