பாதை மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
வேலூரில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதை திடீரென்று மூடப்பட்டதால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேலூர்,
வேலூர் சின்னஅல்லாபுரம் பகுதியில் உள்ள கே.கே.நகர், பனந்தோப்பு, அம்பேத்கர் நகர், ஜே.ஜே.நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து மெயின் ரோட்டுக்கு வருவதற்கு ஒரு பாதையை கடந்த 18 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பாதை தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தின் வழியாக செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதை திடீர் என்று மூடப்பட்டிருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் வேறுபகுதி வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டோல்கேட் பகுதியில் தொரப்பாடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாகாயம் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பாதையை திறக்கும் வரை மறியலை கைவிடமாட்டோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாசில்தார் பாலாஜி சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தார்.
பின்னர் மூடப்பட்ட பாதையை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது ஒருவர் அது தனக்கு சொந்தமான இடம் என்று கூறினார். ஆனால் தற்காலிகமாக பாதையை திறந்து விடுமாறும், பின்னர் பட்டாவை பார்த்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார். அதைத்தொடர்ந்து பாதை திறக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.