6 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை ‘இறந்து விடுவான்’ என்ற பயத்தால் விபரீதம்
சேந்தமங்கலம் அருகே மர்ம காய்ச்சல் பாதிப்பால் தனது 6 மாத ஆண் குழந்தை இறந்து விடும் என்று பயந்த தாய், அந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் நேற்று நடந்துள்ளது.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி(வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு சலூன்கடையில் வேலைப் பார்த்து வருகிறார். இவருடைய மனைவி அன்புக்கொடி(30). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஷர்மிகாஸ்ரீ(9) என்ற மகளும், சர்வந்த் என்ற 6 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். இதில் ஷர்மிகாஸ்ரீ அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அன்புக்கொடி தனது கைக்குழந்தையை சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று காண்பித்தார். அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தைக்கு மர்ம காய்ச்சல் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதால் கூடுதல் செலவாகும் என்று தெரிவித்தனர். இதையடுத்து தனது குழந்தையுடன் அங்கிருந்து அன்புக்கொடி வீட்டுக்கு திரும்பினார்.
அங்கு தனது கணவரிடம், மருத்துவத்திற்கு ஆகும் செலவு குறித்தும், குழந்தை இறந்து விடுமோ? என்ற பயத்துடன் உள்ளதாகவும் கூறி நேற்று முன்தினம் இரவு அன்புக்கொடி அழுது புலம்பி உள்ளார். அப்போது குழந்தையை மறுநாள் காலை (நேற்று) அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று பெரியசாமி கூறி உள்ளார்.
அதன்பிறகு இரவில் தூக்கம் இன்றி தவித்த அன்புக்கொடி, தனது கைக்குழந்தை மர்ம காய்ச்சலால் இறந்து விடுமோ? என்று மன உளைச்சல் அடைந்தார். ஒருகட்டத்தில் தனது குழந்தையுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். இதையடுத்து அதிகாலை 3 மணியளவில் தனது கைக்குழந்தை சர்வந்தை தூக்கிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன்பின்பு மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஊர் பொது கிணற்றுக்கு வந்தார். அங்கு கைக்குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே நேற்று காலையில் அந்த கிணற்றில் அவர்கள் இருவரின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவருடைய கணவர் பெரியசாமி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேளுக்குறிச்சி போலீசார் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அங்கு தீயணைப்பு படையினர் தாய் மற்றும் கைக்குழந்தையின் உடல்களை மீட்டனர். அந்த உடல்களை பார்த்து பெரியசாமி மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. பின்னர் அவர்கள் இருவரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கைக்குழந்தை மர்ம காய்ச்சல் பாதிப்பால் விரைவில் இறந்து விடும் என்று பயந்து அந்த குழந்தையை கிணற்றில் வீசி தாய் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.