திண்டுக்கல்லில் 66.78 மி.மீ. மழை பதிவு
திண்டுக்கல் நகர் பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 66.78 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு போன அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியது. குடிநீர் தட்டுப்பாடும் குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினமும் மழை பெய்தது.
குறிப்பாக, திண்டுக்கல் நகர் பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதே போல அரசு மருத்துவமனை, அரசு அலுவலக வளாகங்களிலும் தண்ணீர் தேங்கியது. திண்டுக்கல் பழைய கோர்ட்டு வளாகத்தில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. சில இடங்களில் சுவர்களும் பெயர்ந்தன.
நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 66.78 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதே போல, பழனியில் 10.5 மி.மீ., வேடசந்தூரில் 6.9 மி.மீ., சத்திரப்பட்டியில் 10.2 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் மழை பதிவாகவில்லை.
தற்போது, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துவிட்டதால், அணைகளுக்கு வந்து கொண்டு இருந்த நீரின் அளவு குறைந்து வருகிறது. சில அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. 65 அடி உயரம் கொண்ட பழனி பாலாறு- பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 45.47 அடியாக இருக் கிறது. 1,524 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில், 598.85 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் 9 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.
பரப்பலாறு அணையில் 15.35 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து 3 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லை. 66.47 அடி உயரம் கொண்ட வரதமாநதி அணையின் நீர்மட்டம் 60.37 அடியாக இருக் கிறது. 110.9 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில், 85.03 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருக்கிறது. அணைக்கு 43 கனஅடி தண்ணீர் வருகிறது. 70 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
64 அடி உயரம் கொண்ட மருதாநதி அணையின் நீர்மட்டம் 61.75 ஆக இருக்கிறது. அணையில் 116.5 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு 23 கனஅடி நீர் வருகிறது. இதே போல, குதிரையாறு அணையில் 50.64, குடகனாறு அணையில் 21.43, நங்காஞ்சியாறு அணையில் 66.04 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு குளங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மழை காரணமாக திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள ராஜாக்குளம் நிரம்பியது. அதுமட்டுமின்றி திண்டுக்கல் நகர் பகுதிகளில் உள்ள குளங் களும் நிரம்பின.