அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை-ரூ.40 ஆயிரம் திருட்டு
பவானி அருகே அரசு பள்ளிக்கூட ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பவானி,
பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் மாணிக்கம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் குணசேகரன். பூனாட்சியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களாக தொடர் விடுமுறை வந்ததால் குணசேகரன் குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் பதறிப்போன அவர் உள்ளே ஓடிச்சென்று பார்த்தார்.
வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 10 பவுன் நகை, ரொக்கப்பணம் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் குணசேகரன் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவையும் உடைத்து அதில் இருந்த நகையையும், பணத்தையும் திருடிச்சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இதுபற்றி குணசேகரன் பவானி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதைதொடர்ந்து பவானி போலீசார் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பவானி பகுதியில் கடந்த மாதம் 4 இடங்களில் திருட்டுப்போனது. அதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குலதெய்வ கோவிலும் அடக்கம். இந்த நிலையில் இந்த மாதமும் திருட்டு சம்பவங்கள் தொடர்வது அந்த பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.