ஈரோடு மாவட்டத்தில் 18½ லட்சம் வாக்காளர்கள் கலெக்டர் வரைவு பட்டியலை வெளியிட்டார்
ஈரோடு மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டார். அதன்படி 18½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதை மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா பெற்றுக்கொண்டார்.
வரைவு வாக்காளர் பட்டியலின் படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 18 லட்சத்து 51 ஆயிரத்து 129 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 9 லட்சத்து 9 ஆயிரத்து 240 ஆண்களும், 9 லட்சத்து 41 ஆயிரத்து 828 பெண்களும், 61 மாற்று பாலினத்தினரும் உள்ளனர். படை வீரர் வாக்காளர்களாக 275 ஆண்களும், 117 பெண்களும் என மொத்தம் 392 பேர் இருக்கிறார்கள்.
திருத்தம்
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
வரைவு வாக்காளர் பட்டியல் ஆர்.டி.ஓ. அலுவலங்கள், நகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 2018-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் தொடர்பாக பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான மனுக்களை வருகிற 31-ந் தேதிக்குள் கொடுக்கலாம். அதன்பின்னர் வருகிற 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் 9 ஆயிரம் வாக்காளர்கள் அதிகமாக இடம் பெற்று உள்ளனர். வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணியில் இறந்தவர்களின் பெயரை நீக்க வேண்டும். இதற்காக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பட்டியல் எடுக்கப்பட்டு சரிபார்க்கப்படும். அப்போது சான்றிதழ் வழங்கப்பட்டவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் அதை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இணையதளம்
வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர்களை சேர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதன் மூலமாக பல நன்மைகள் உள்ளன. விண்ணப்பதாரரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை அவர்களே தட்டச்சு செய்வதால் பிழை எதுவும் ஏற்படாது.
மாநகராட்சி பகுதியில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வார்டு வாரியாக வழங்க சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறினர். இருந்தாலும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளரை உரிய ஆய்வு நடத்தி மாநில தேர்தல் ஆணையாளரிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மேனகா, ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, தேர்தல் தாசில்தார் வேணுகோபால், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.