தாராபுரம் அருகே கார் கவிழ்ந்து விவசாயி பலி மற்றொருவர் காயம்

தாராபுரம் அருகே கார் கவிழ்ந்து விவசாயி பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

Update: 2017-10-03 23:00 GMT
தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தளவாய்பட்டிணம் அருகே உள்ள பாப்பையன்புதூரை சேர்ந்தவர் கருணசெல்வம் (வயது 39). விவசாயி. இவருக்கு திலகவதி என்கிற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கருணசெல்வம் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரை காரில் அழைத்துக் கொண்டு தாராபுரம் வந்தார்.

பின்னர் அங்கிருந்து இருவரும் தாராபுரம் அருகே உள்ள மேட்டுப்பாளையத்திற்கு உறவினரை பார்ப்பதற்காக சென்றனர். காரை கருணசெல்வம் ஓட்டிச் சென்றுள்ளார். கார் சகுனிபாளையத்திலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காற்றாடிகாடு என்ற இடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.

பலி

இந்த விபத்தில் கருணசெல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். கலைச்செல்வன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் விரைந்து சென்று கருணசெல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்