தூத்துக்குடி மாவட்டத்தில் 34 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 34 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2017-10-03 22:42 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் 34 சப்-இன்ஸ்பெக்டர்களை நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி நாலாட்டின்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்டோரியா அற்புதமணி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கும், தூத்துக்குடி தென்பாகம் ஜீவமணி தர்மராஜ், தருவைகுளத்துக்கும், தாளமுத்துநகர் சியாம்சுந்தர் புதுக்கோட்டைக்கும், திருச்செந்தூர் தாலுகா சிவசுப்பிரமணியன் தட்டார்மடத்துக்கும், குளத்தூர் மீனா கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவுக்கும், புதுக்கோட்டை அருள்சாம்ராஜ் கழுகுமலைக்கும், கோவில்பட்டி கிழக்கு சுகாதேவி நாலாட்டின்புதூருக்கும், தூத்துக்குடி சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு விஜயஅனிதா மாவட்ட குற்றப்பிரிவுக்கும், செய்துங்கநல்லூர் இன்னோஸ்குமார் தனிப்பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

ஆறுமுகநேரி

இதே போன்று நாசரேத் மீனா மெஞ்ஞானபுரத்துக்கும், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு ஜென்சி, தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், மாவட்ட குற்றப்பிரிவு அனிதா தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், சிப்காட் அன்னலட்சுமி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், தட்டார்மடம் பாலகிருஷ்ணன் முறப்பநாடுக்கும், மெஞ்ஞானபுரம் மாடசாமி ஆறுமுகநேரிக்கும், தருவைகுளம் மகேசுவரி பசுவந்தனைக்கும், மணியாச்சி பண்டாரம் புளியம்பட்டிக்கும், நாசரேத் இளங்கோ ஆறுமுகநேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கோவில்பட்டி

மேலும், நாசரேத் சுவாமிதாஸ் சேரகுளத்துக்கும், கயத்தாறு பாண்டியன் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கும், தெர்மல்நகர் அப்பாத்துரை தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவுக்கும், புதியம்புத்தூர் எஸ்.வீரபாகு மத்திய குற்றப்பிரிவுக்கும், கழுகுமலை ஓ.வீரபாகு கோவில்பட்டி குற்றப்பிரிவுக்கும், கயத்தாறு மணி கோவில்பட்டி குற்றப்பிரிவுக்கும், புதுக்கோட்டை செல்வம் முறப்பநாடுக்கும், ஆழ்வார்திருநகரி பேச்சி தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவுக்கும், குரும்பூர் கதிரேசன் தூத்துக்குடி மத்திய குற்றப்பிரிவுக்கும், பசுவந்தனை பாலசுப்பிரமணியன் நாரைக்கிணறுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரவிமதி புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், சேரகுளம் முத்துசாமி, மோப்பநாய் பிரிவுக்கும், விளாத்திகுளம் அங்குத்தாய் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கும், புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய மேரி, திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

இது தவிர நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் செல்வக்குமார் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

மேலும், நெல்லை மாவட்டத்திலிருந்து ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டு, மணியாச்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் புதிதாக பயிற்சி முடித்த 46 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணி நியமனம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார். 

மேலும் செய்திகள்