காந்தி ஜெயந்தியன்று திருட்டுத்தனமாக மது விற்ற 18 பேர் கைது

காந்தி ஜெயந்தியன்று திருட்டுத்தனமாக மது விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-10-03 22:30 GMT

திருவள்ளூர்,

காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடவேண்டும் என கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டிருந்தார். அதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி மாவட்டம் முழுவதும் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

போலீசார் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, செங்குன்றம், மணவாளநகர், கடம்பத்தூர், மப்பேடு, அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு போன்ற பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட சோதனையில் மாவட்டம் முழுவதும், மதுவை திருட்டுத்தனமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 685 மதுபாட்டில்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்