தூத்துக்குடி காதிகிராப்டில் தீபாவளி சிறப்பு விற்பனை கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி காதி கிராப்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்.

Update: 2017-10-02 23:35 GMT

தூத்துக்குடி,

தமிழ்நாடு கதர் கிராம தொழில்வாரியம் சார்பில் நேற்று தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் உள்ள காதி கிராப்டில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்ட காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் தீபாவளி சிறப்பு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், கதர் கிராம தொழிற் கூட்டுறவு அலுவலர் சரவணராஜா, காதி கிராப்ட் மேலாளர் ஸ்ரீதர், கதர் வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதிகளில் கதர் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்று கதர் மற்றும் பாலி வஸ்திரா ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அரசு துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தவணை முறையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் செய்திகள்