காமராஜர் நினைவு நாள்: உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காமராஜர் நினைவு நாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2017-10-02 23:22 GMT
நெல்லை,

பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் வந்து இருந்தனர்.

அ.தி.மு.க. (அம்மாஅணி) சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் விஜிலா சத்யானந்த் எம்.பி. மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன் உள்பட பலர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் காமராஜர் சிலை முன்பு ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
தே.மு.தி.க. சார்பில் வாகனங்களில் ஊர்வலமாக வந்து நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அலி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடார் மக்கள் சக்தி அமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், நாடார் மக்கள் சக்தி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அற்புதராஜ், நிர்வாகிகள் மில்டன், செல்வின், பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் முத்துகுட்டி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. வக்கீல் அணி செயலாளர் சாமுவேல் பிரின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கண்மணி மாவீரன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மீனவர் அணி தாமஸ், மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் களந்தை நெல்சன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முத்துவளவன், பேராசிரியர் நாகராஜன், தமிழர் நற்பணி கழகம் மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பல்வேறு கட்சியினர் மற்றும் தரப்பினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்