சைதாப்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

சென்னை சைதாப்பேட்டை சின்னப்பன் கார்டன் முதல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவருடைய மனைவி சுசிலா (27).

Update: 2017-10-03 00:15 GMT
சென்னை,

கம்ப்யூட்டர் மையத்தில் வேலை பார்த்து வருகிறார். சுசிலா சம்பவத்தன்று வேலை முடிந்து, சைதாப்பேட்டை பள்ளிவாசல் சாலை வழியாக இரவு 9 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுசிலா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர். இதுபற்றி சைதாப்பேட்டை போலீசில் சுசிலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சுசிலாவிடம் மர்ம ஆசாமிகள் நகையை பறித்து செல்வதும், சுசிலா அவர்களை பிடிக்க பின் தொடர்ந்து ஓடும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்