வணிகர் சங்கங்களின் பேரவையினர் உண்ணாவிரதம்
வணிகர் சங்கங்களின் பேரவையினர் உண்ணாவிரதம்
நாகர்கோவில்,
சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வேண்டும், காந்தியின் சுதேசி கொள்கையை காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமை தாங்கினார். செயலாளர் அருள்ராஜ், பொருளாளர் ஜேம்ஸ் மார்சல், பத்மநாபன், ராஜாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.