ஆலங்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

ஆலங்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலியானாள்.

Update: 2017-10-01 22:45 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள தவளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் பிரகதீஸ்வரிக்கு (வயது 4) கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக பல மருத்துவமனைகளில் காண்பித்தும் காய்ச்சல் குறையவில்லை. இதனைத் தொடர்ந்து சரவணன், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரகதீஸ்வரியை சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டது.

சிறுமி பலி

இதையடுத்து சிறுமியை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரகதீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தாள். டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் தவளப்பள்ளம் கிராம மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த ஊரில் பலருக்கு இதேபோன்று காய்ச்சல் இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே டெங்குவை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்