திருவள்ளூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருவள்ளூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-10-01 22:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல்குப்பத்தில் காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், சித்ரா பெர்னான்டஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது அவர்கள் காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து எடுத்து கூறினார்கள்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் எங்கள் பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட வில்லை, சாலை வசதி சரி இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்