27 தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.4½ கோடி நிதி உதவி அமைச்சர் கந்தசாமி வழங்கினார்
புதுச்சேரி சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தின் மூலம் ஆதரவற்ற குழந்தைகள்,
புதுச்சேரி,
தெருவோர குழந்தைகள் மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு இல்லங்களை நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் புதுச்சேரி சமூக நலத்துறை மூலம் உரிமம் பெற்ற 27 தொண்டு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அரங்கில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி 27 தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவியாக ரூ.4 கோடியே 45 லட்சத்து 19 ஆயிரத்து 400 வழங்கினார். இதன் மூலம் அந்த இல்லங்களில் தங்கியிருக்கும் 1,670 குழந்தைகள் பயனடைவர்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் சாரங்கபாணி, களஅதிகாரி விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.