ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் திறப்பு: ரசாயன கழிவு கலந்து நுரையாக வந்ததால் பொதுமக்கள் பீதி
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் ரசாயன கழிவு கலந்து நுரையுடன் வெளியேறியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
ஓசூர்,
கர்நாடக மாநிலம் நந்தி மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. கடந்த 28-ந் தேதி வினாடிக்கு 2,560 கன அடி தண்ணீர் வந்த நிலையில் தற்போது 4 ஆயிரத்து 485 கன அடி தண்ணீர் வந்தது.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 44.28 அடியாகும். அணையின் நேற்றைய நீர்மட்டம் 43.70 அடியாகும். ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி 5 மதகுகள் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக பாத்தகோட்டா தரைப்பாலம் மட்டுமின்றி கெலவரப்பள்ளி அணை மதகிற்கு எதிரே உள்ள தட்டிகானப்பள்ளி தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியது. மேலும் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
ஆற்றின் குறுக்கே தட்டிகானப்பள்ளி தரைப்பாலத்தில் தொழிற்சாலை ரசாயன கழிவு கலந்து நீர் நுரை பொங்க சென்றது. இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கெலவரப்பள்ளி அணையை சுற்றிலும் தண்ணீர் நுரை பொங்கி காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன், ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா ஆகியோர் அங்கு சென்று தென்பெண்ணை ஆற்றை பார்வையிட்டனர். மேலும் அணையில் தேங்கிய நுரையை அப்புறப்படுத்த தீயணைப்பு துறையினருக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் கதிரவன் கூறும்போது, கர்நாடக மாநில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரும், பெங்களூரு குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவுநீரும் தென்பெண்ணை ஆற்று நீரில் கலந்ததால் இது போன்று நுரை அதிகமாக வந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக இந்த தண்ணீரை மாதிரிக்கு எடுத்துள்ளோம். அதன் அறிக்கை வந்த பிறகே எந்த காரணத்தால் நீர் மாசுபட்டது என தெரிய வரும். இந்த நீரில் நைட்ரேட் அதிகமாக கலந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் அந்த நீரை குடிக்க பயன்படுத்த வேண்டாம். மேலும் ஆடு, மாடுகளுக்கும் வழங்க வேண்டாம் என கூறினார்.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் முழுவதும் நுங்கும், நுரையுமாக வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.