நாகை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி
நாகை அருகே வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்து விட்டு திரும்பிய போது பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பலியானார்கள்.
நாகப்பட்டினம்,
ஈரோடு மாவட்டம் அவள்பூத்துறை பாரதிவீதி பகுதியை சேர்ந்த செல்லதுரை மகன் சுதாகர் (வயது32). இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த அழகேசன் மகன் அருண்குமார் (25), ரவிக்குமார் மகன் டெஸ்வா (21), ஆனந்தராஜ் மகன் மிலன் (29) உள்பட 5 பேருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு காரில் சுற்றுலா வந்தார். பின்னர் அவர்கள் ஈரோடு செல்வதற்காக முடிவு செய்து காருக்கு பெட்ரோல் போடுவதற்காக வாஞ்சூருக்கு சென்று கொண்டிருந்தனர். காரை சுதாகர் ஓட்டினார். அப்போது நாகையை அடுத்த செல்லூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மைல் கல்லில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சுதாகரும், அருண்குமாரும் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டெஸ்வா படுகாயம் அடைந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அப்போது அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த டெஸ்வாவை ரோந்து வாகனத்தில் ஏற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வெளிப்பாளையம் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து சுதாகர், அருண்குமார் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.