அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் உள்ள அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2017-09-30 22:30 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் உள்ள அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அடைக்கலாபுரம் தூய சூசை அறநிலைய ஆன்மிக இயக்குனர் செட்ரிக்பீரிஸ் தலைமையில் திருசப்பர ஜெபமாலை பவனி மற்றும் திருப்பலி நடந்தது. இரவு செட்ரிக்பீரிஸ் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அழகப்பபுரம் பங்கு தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மறையுரையாற்றினார். இதில் அடைக்கலாபுரம் துணை பங்கு தந்தை சில்வஸ்டர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பொன்மகுடம்

இந்த திருவிழா வருகிற 8-ந் தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. விழா நாட்களில் காலையில் திருச்சப்பர ஜெபமாலை பவனி, திருப்பலி, மாலையில் நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9-ம் திருநாளான வருகிற 6-ந் தேதி அன்று காலையில் பொன்விழா கலையரங்கம் திறப்பு விழாவும், அதிசய ஆரோக்கிய அன்னைக்கு பொன்மகுடம் சூட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது. 10-ம் திருநாள் காலை 6 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி ஆசீர் நடக்கிறது.

ஏற்பாடுகளை அடைக்கலாபுரம் பங்குத்தந்தை ஜஸ்டின் மற்றும் தூய அன்னாள் சபை அருட்சகோதரிகள், திருவிழா பணிக்குழுவினர், பங்கு இறை மக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்