தூத்துக்குடி அருகே லாரி மோதி தொழிலாளி சாவு

தூத்துக்குடி அருகே லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-09-30 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி கதிர்வேல் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47) கூலி தொழிலாளி. இவர் கடந்த 28-ந் தேதி இரவு, வேலையை முடித்து விட்டு, புதுக்கோட்டை அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதியில் சர்வீஸ் ரோட்டில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக கண்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

சாவு

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சிகிச்சை பலனளிக்காமல் கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்