நாமக்கல்லில் சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
நாமக்கல்லில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் பிரதான சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் நகராட்சி நிர்வாகம் சார்பில் திருச்சி சாலையில் உள்ள மேம்பாலம் அருகே தற்காலிக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் அவ்வப்போது அகற்றுவது வழக்கம். ஆனால் அந்த குப்பை தொட்டிகளில் குப்பைகள் கொட்டப்படாமல் அதன் அருகில் கொட்டப்பட்டு கிடக்கிறது. பண்டிகை காலம் என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் குப்பை கிடங்கில் குப்பைகள் தேங்கி இருப்பது போல் அங்கு குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அறிவுறுத்த வேண்டும்
இதேபோல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாக நுழைவுவாயில் அருகிலும் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்க வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் புகார் கூறுகின்றனர்.
எனவே பொதுமக்கள் குப்பைகளை தொட்டிகளில் மட்டும் கொட்டவும், சாலையோரங்களில் கொட்டக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதே போல் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.