அம்மாபேட்டை அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம் அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்பு
அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சரவணபவா தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், பவானி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒலகடம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் வி.ஐ.முத்துசாமி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு அரசின் சாதனைகள் குறித்து பேசினார். இதில், பட்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சசி என்கிற இளங்கோ, ஒன்றிய பொருளாளர் செங்கோட்டுவேல் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.