பேரையூர் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்; ஒருவர் கைது
பேரையூர் அருகே உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்,
பேரையூர் தாலுகா, சாப்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்குமலைத்தொடர்ச்சி பீட் 7 பதிபட்டி பகுதிகளில் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வனச்சரகர் பொன்னுச்சாமி தலைமையில், வனக்காவலர் முத்துகனி, மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சந்தையூரைச் சேர்ந்த வீரணன் என்ற காயகுடியான்(வயது 47) என்பவர் தோட்டத்தில் சோதனை செய்த போது அங்குள்ள கிணற்றில் அரசு அனுமதியின்றி உரிமம் பெறாத நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இந்த துப்பாக்கி வனவிலங்குகளை காட்டிற்குள் வரவிடாமல் விரட்டவும், வேட்டையாடவும் பயன்படுத்த வைத்திருப்பது என்றும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து துப்பாக்கியை பறிமுதல் வனத்துறையினர் வீரணன் என்ற காயகுடியானை, பேரையூர் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.