வேலை வாங்கி தருவதாக என்ஜினீயர்களிடம் ரூ.2 லட்சம் மோசடி 3 பேர் கைது

புனே வார்ஜே பகுதியில் சேத்தன் சாகர் (வயது30), பிரசாந்த் பன்சாரே (25), ரியாஸ் சேக் (31) ஆகிய மூன்று பேர் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களது நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் 3 பேர் வேலை வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

Update: 2017-09-28 23:36 GMT

மும்பை,

இதற்காக அவர்களிடம் இருந்து 3 பேரும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வாங்கி உள்ளனர்.

சில நாட்கள் கழித்து ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் பணிநியமன ஆணையை கொடுத்து உள்ளார். ஆனால் அந்த நிறுவனம் அவர்களை பணியில் சேர்க்க மறுத்து விட்டது.

இதையடுத்து மூன்றுபேரும் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர். இதில் 40 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்து உள்ளனர். மீதி 2 லட்சம் பணத்தை கொடுக்காமல் அலுவலகத்தை பூட்டி விட்டு மூன்று பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜினீயர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் நாந்தெட்டில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்