சமூக நலத்துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
சமூக நலத்துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
ஈரோட்டை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). டிப்ளமோ படித்துள்ள இவர், நேற்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர், அவர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவர் நீண்டநேரம் நிற்பதை அறிந்த சமூக நலத்துறை அலுவலக ஊழியர்கள், அவரிடம் எதற்காக இங்கு நிற்கிறீர்கள்? அதிகாரிகளை பார்க்க வேண்டுமா? என்று கேட்டனர். அதற்கு பிரகாஷ், ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி என்னை கலெக்டர் அலுவலகத்திற்கு வர சொன்னார் என்றும், அவருக்காக இங்கு காத்திருக்கிறேன் என்றும் கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சமூக நலத்துறை ஊழியர்கள், வேலை வாங்கி தருவதாக கூறிய நபர் வந்தவுடன் தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறிவிட்டு சென்றனர். இதையடுத்து சிறிது நேரத்தில் பிரகாஷ் மற்றும் அவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறிய நபரும் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம், குமார் இருக்கிறாரா? அவரை பார்க்க வேண்டும் என்று கேட்டனர்.
ஆனால் குமார் என்ற பெயரில் யாரும் வேலை செய்யாத காரணத்தினால் நீங்கள் யார்? உங்களது பெயர் என்ன? என்று கேட்டபோது, அதற்கு பதில் எதுவும் தெரிவிக்காமல் பிரகாசுடன் வந்த நபர், அங்கிருந்து நைசாக வெளியே சென்றார். பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த அந்த நபரை ஊழியர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் தினேஷ் (28) என்பதும், இவர், அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசியுள்ளதும், முதற்கட்டமாக ரூ.20 ஆயிரம் பெற்றுக்கொண்டிருப்பதும் தெரியவந்தது. ஆனால் பிரகாஷ் ஏராளமானோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி பணம் மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.